Pahalgam Terrorist Attack: பஹல்கம் தாக்குதல்.. அஜித் தோவலுடன் பிரதமர் அவசர ஆலோசனை.. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்?
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது வெளிநாடு அரசுமுறை பயணத்தை நிறுத்திவிட்டு தாயகம் திரும்பி இருக்கிறார்.
ஏப்ரல் 23, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்கம் (Pahalgam Terrorist Attack) பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என 29 பேர் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளது தேசிய அளவில் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது. லஸ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. Donald Trump: "இந்தியாவுடன் துணைநிற்போம்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.. காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம்.!
மத்திய அமைச்சரவை கூட்டம்:
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவால் தலைமையில் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது அமீரக பயணத்தை அவசர கதியில் தாயகம் திரும்பியுள்ளார். விரைவில் அவரின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாகவே பயங்கரவாதிகளுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு எச்சரித்துவிட்டது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவால் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். விரைவில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஏதும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 புல்வாமா நினைவிருக்கா?
கடந்த 2019 பிப்ரவரி 14 அன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் இராணுவ வீரர்களின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருந்தனர். அதனைத்தொடர்ந்து பிப்.26 அன்று பதில் தாக்குதல் இந்தியாவின் விமானப்படை சார்பில் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. இந்த முன்னெடுப்பில் பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் குண்டுவீசி தாக்கி அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்கமில் தேடுதல் வேட்டையில் இந்திய இராணுவம்:
#WATCH | J&K | Search operation underway in Pahalgam following the #PahalgamTerroristAttack.
(Visuals deferred by unspecified time.) pic.twitter.com/XAIwIBv6et
— ANI (@ANI) April 23, 2025
அமீரக பயணத்தை அவசரமாக ரத்து செய்து கனத்த இதயத்துடன் திரும்பிய மோடி:
#WATCH | Prime Minister Narendra Modi arrives in Delhi after cutting short his Saudi Arabia visit in view of the #PahalgamTerroristAttack in Kashmir
(Source - ANI/DD) pic.twitter.com/5WAk8kL0g5
— ANI (@ANI) April 23, 2025
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 08:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

