பச்சைக்கொடி காட்டிய ரஷ்யா.. உச்சகட்டமாகும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை..!
ரஷ்ய அதிபர் புதின், பஹல்காம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மே 05, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இது, தற்போது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. 'மூக்கு மேல ராஜா' - ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடி பரிசு..!
ரஷ்யா ஆதரவு:
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தருவதாக ரஷ்ய அதிபர் புதின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 'ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு இரங்கலை தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்' என பதிவிட்டுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)