Married Woman Murder: கள்ளக்காதலர்கள் இடையே தகராறு; பெண் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை..!

டெல்லியில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை வாலிபர் ஒருவர் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Married Woman Murder: கள்ளக்காதலர்கள் இடையே தகராறு; பெண் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை..!
Crime Murder (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 18, புதுடெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 10 மற்றும் 8 வயது உடைய இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூரை சேர்ந்த சஞ்சய்சிங் (வயது 28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில், அது கள்ளத்தொடர்பாக மாறியது. Mobile Phone Overheating: மொபைல் போன் சூடாவதற்கான காரணங்கள் என்னென்ன..? – விவரம் உள்ளே..!

இதனையடுத்து, இவர் அடிக்கடி வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாக கொண்டிருந்துள்ளார். பின்னர், ஒருநாள் இவர் வீட்டிற்கு செல்லும்போது, அந்த பெண் வேறொருவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்டு கோபமடைந்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சஞ்சய்சிங் பெண்ணின் கழுத்தை நெரித்து, மாடியில் (Thrown From The Floor And Killed) இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பிறகு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் 10 வயது மகனை எழுப்பி, தாயார் தவறி கீழே விழுந்துவிட்டார் எனக்கூறி, ரத்ததை சுத்தம் செய்ய சொல்லியுள்ளார்.

இந்நிலையில், மாடிப்படி அருகே பெண் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், சஞ்சய்சிங் தான் இதை செய்துள்ளார் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Apr 18, 2024 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).