Young Woman Raped: சினிமா ஆசைக்காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; உதவி இயக்குனர் கைது..!
ஆந்திர பிரதேசத்தில் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை சினிமா உதவி இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 02, திருமலை (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சித்தார்த்வர்மா (வயது 30). இவர் சினிமாவில் உதவி இயக்குனராக (Assistant Director) பணியாற்றி வருகிறார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திரா காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் சித்தார்த்வர்மாவுக்கு அறிமுகம் ஆனார். அப்போது, சித்தார்த்வர்மா அந்த இளம்பெண்ணிடம் சினிமாவிற்கு வந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனக் கூறி, செல்போன்களை எண்களை இருவரும் வாங்கிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!
இதனையடுத்து, போட்டோ செஷன் எடுத்து அனுப்ப வேண்டும் என ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த இளம்பெண்ணிடம் மதுபோதையில் இருந்த அவர், பாலியல் சீண்டலில் (Sexual Abuse) ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், தன்னுடன் நெருக்கமாக இருந்தால், சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தருகிறேன் எனக் கூறி, அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி அவரை அழைத்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும், சினிமா வாய்ப்புகள் எதுவும் வராததால், தான் இவரிடம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து, கச்சிபவுலி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்தார்த்வர்மாவை நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அவர், இதுபோல் பல பெண்களிடம் சினிமா ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அவரது செல்போனில் பல இளம்பெண்களின் எண்களை காவல்துறையினர் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

