Minor Girl Gang Rape (Photo Credit: @TrueStoryUP X)

ஜூலை 15, காசியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் (Ghaziabad) உள்ள கவிநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 9ஆம் வகுப்பு மாணவியை 4 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மூடியை தின்று 800 பாட்டில்கள் மதுவை குடித்த எலிகள்.. அதிகாரிகளை அதிரவைத்த அரசு ஊழியர்கள்.!

சிறுமி கூட்டு பலாத்காரம்:

இந்நிலையில், நேற்று (ஜூலை 14) இரவு சிறுமி தனது நண்பருக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்தார். அந்த இளைஞர் தனது மற்ற 3 நண்பர்களுக்கும் போன் செய்து அழைத்துள்ளார். அவர்கள் 4 பேரும் அங்கு சென்று இரவு முழுவதும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். சிறுமியின் தாய் அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அதில் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார். மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் மைனர்கள் ஆவர். இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3