
ஜூன் 06, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் (Meerut) உள்ள தாத்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஸ்தா என்ற தனிஷ்கா (வயது 17). இவர், 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி மதியம் தனது நண்பரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, செல்போனை தாய் பறித்தார். இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த தாய் தனது மகளை கழுத்தை நெரித்து (Murder) கொன்றார். பின்னர், அவரது குடும்பத்தினர் உதவியுடன் தனது மகளின் உடலை அப்புறப்படுத்த திட்டமிட்டனர். Mumbai Shocker: இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பால் நேர்ந்த சோகம்..!
மகள் கொடூர கொலை:
இதனையடுத்து, மகளின் தலையை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து, அவரது உடலை பார்த்தபூரின் பகதூர்பூர் கால்வாயில் வீசினர். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அதில், குற்றம் சாட்டப்பட்ட தாய் மற்றும் அவரது உறவினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரது உடல் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவரது துண்டிக்கப்பட்ட தலையைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.