Teenager Murder: காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை; இளம்பெண்ணின் சகோதரர் தலைமறைவு..!
கர்நாடகாவில் தனது சகோதரியின் காதலனை வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 17, பெலகாவி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி, காந்திநகர் பகுதியை சேர்ந்த இப்ராகிம் கவுஸ் (வயது 22) என்பவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து (Love Affair) வந்துள்ளார். இதுகுறித்து, இளம்பெண்ணின் சகோதரர் முசாமில் சட்டிகேரி என்பவருக்கு தெரியவந்ததை அடுத்து, இப்ராகிம் கவுஸை அழைத்து தனது சகோதரியை விட்டு விலக வேண்டும் என மிரட்டி எச்சரித்துள்ளார். ஆனால், இப்ராகிம் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இளம்பெண்ணை காதலித்து வந்தார். Computer Engineer Suicide: காதல் தோல்வி; விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை..!
இதனையடுத்து, நேற்று மதியம் இப்ராகிம் கவுஸ் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து சென்ற முசாமில் சட்டிகேரி, வண்டியை மறைத்து அவரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து இப்ராகிம் கவுஸை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், பலத்த காயத்துடன் துடிதுடித்து கொண்டிருந்த இப்ராகிம் கவுஸை அருகில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முசாமில் சட்டிகேரியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on May 17, 2024 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

