UP Govt School: மாணவ - மாணவிகள் முன்பு அரைகுறை ஆடையுடன் போதையில் படுத்து உறங்கிய தலைமை ஆசிரியர்; அரசு பள்ளியில் அதிர்ச்சி.!
எந்த நேரமும் போதையில் பள்ளிக்கு வருகை தரும் தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் உறங்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானதை தொடர்ந்து, விசாரணைக்கு பின்னர் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஜூலை 28, பஹ்ரைச் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டம், விசேஷ்வ்ராஜ்கன்ச் பகுதியில் அரசு முதன்மை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பாடங்கள் பயிற்றுவிக்கப்டுகின்றன. பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக துர்கா பிரசாத் ஜெய்ஸ்வால் என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் அரைகுறை ஆடையுடன் போதையில் வகுப்பறையில் மாணவர்கள் முன்பு படுத்து உறங்கிய அதிர்ச்சி காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
இந்த வீடியோ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பார்வைக்கு செல்லவே, அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஷிவ்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு முதன்மை கல்வி நிறுவனத்தில் இச்செயல் நடந்தது தெரியவந்தது. Vadapalani: கஞ்சா போதையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்; 6 வாகனங்களின் கண்ணாடியை உடைத்து அட்டூழியம்.!
இந்த விஷயம் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, இவ்வாறான சர்ச்சை செயல் நடைபெறுவது முதல் முறை இல்லை என்பது உறுதியானது. தலைமை ஆசிரியரின் அநாகரீகமான செயலால் சில மாணவிகள் பள்ளிக்கு படிக்க வருவதையே நிறுத்திக்கொண்டுள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் நடத்த விசாரணையை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரின் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளிலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Jul 28, 2023 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

