
பிப்ரவரி 12, பாகல்பூர் (Bihar News): பீகார் மாநிலம், பாகல்பூர் (Bhagalpur) மாவட்டத்தில் கங்கா கர்ஹாரியா நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி கழிவறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்ட கிராம மக்கள், விரைந்து சென்று கழிவரையை திறந்து பார்த்துள்ளனர். அதில், பள்ளி ஆசிரியர் ஒருவர், 8ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். Unnatural Sex By Husband Not Offence: மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல.. சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
மாணவி பலாத்காரம்:
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஆசிரியரைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேற்கொண்ட விசாரணையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மாணவியை காதலித்து வந்ததாகவும், மாணவியின் குடும்பத்தினரிடம் திருமணத்தைப் பற்றி கூறியதாகவும் தெரியவந்தது.
ஆசிரியர் இடைநீக்கம்:
இதனையடுத்து மாணவியும், அவரது குடும்பத்தினரும் முறையான புகார் எதுவும் அளிக்காததால், ஆசிரியர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், கல்வித்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.