டிசம்பர், 9: உடலில் நோயெதிர்ப்பு சக்தி (Immunity) குறைந்து இருப்பதால், அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகலாம். உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்த வேண்டும். நமது வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை வைத்தே நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை நாம் வலுப்படுத்தலாம்.
அந்த விசயத்திற்கு கருப்பு மிளகு என்பது சிறந்த தீர்வாகும். ஒரு டம்ப்ளர் சூடான நீரில் கருப்பு மிளகு தூளை சேர்த்து ஒரு மாதம் வீதம் குடித்து வந்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் சரியாகும். பல உடல்நலக்கோளாறுகளில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் குடலின் ஆரோக்கியத்தை பேணும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் மிளகு முதன்மையானது ஆகும்.
தினமும் மிளகு நீர் குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றம் செய்யப்படும். செரிமானம் மேம்படும். வயிற்று பிரச்சனை சரியாகும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். பருவ காலங்களில் ஏற்படும் நோய்களின் தாக்குதல் தவிர்க்கப்படும். WaterProof Smartphone: வாட்டர்ப்ரூப் ஸ்மார்ட்போன்கள் டாப் 10 எவை?.. பட்ஜெட் விலையிலும் வாட்டர்புரூப் போன்கள்…!
காலை நேரத்தில் வெறும் வயிறில் பலரும் தண்ணீர் குடிப்பது இயல்பு. இவர்கள் இளம் சூடுள்ள நீரில் கருப்பு மிளகு தூளினை சேர்த்து குடிக்கலாம். இதனால் செரிமானம் சீராகும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு மிளகு குடிநீர் சிறந்த தீர்வாகும். மிளகு நீர் குடித்தால் ஒரு மாதத்திலேயே உடல் எடை கணிசமாக குறையும்.
குடலின் ஆரோக்கியம் அதிகரிப்பது மட்டுமல்லாது. சருமத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும். அதனைப்போல நீரிழப்பு பிரச்சனையும் தடைபடும். இதனால் நாள் முழுவதிலும் உற்சாகம் கிடைக்கும். நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் சரியாகும். மிளகில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
தினம் காலை நேரத்தில் மிளகு நீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் சரியாகும். சுவாச மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். மூட்டுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கீல்வாதம், மலச்சிக்கல், சுவாச கோளாறு போன்றவையும் சரியாகும்.
Note: மிளகு நீர் அதிகளவு குடிப்பது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆகையால் அளவுடன் குடிப்பது நல்லது. நெஞ்சில் புண்கள் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும்.