Mango Vada (Photo Credit: YouTube)

மே 30, சென்னை (Kitchen Tips): கோடை காலத்தில் மாங்காய் சீசனில், இதனை சரியாக பயன்படுத்தி, மாங்காயை பல விதமாக சமையல் செய்து சாப்பிட வேண்டும். மாங்காயில் வைட்டமின் ஏ, நார்ச்சத்துகள் உள்ளன. இவை பசியை தூண்டக்கூடியது. உடலுக்கு சூடு என மாங்காயை பலர் சாப்பிடுவதில்லை. அந்த வகையில், மாலை நேரங்களில் வீட்டில் சுவையான மாங்காய் வடை (Mango Vada) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

மாங்காய் – 1 (துருவிக் கொள்ளவும்)

பச்சை மிளகாய் – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 100 கிராம்

சோம்பு – 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு. Motorola G34 5G Smart Phone Offer Sale: மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட் போன் அசத்தலான தள்ளுபடி விலையில் விற்பனை..!

செய்முறை :

முதலில் பருப்புகளை நீரில் ஊற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் துருவிய மாங்காய், மிளகாய் விழுது, சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பு, அரிந்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின், கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, பிசைந்த மாவை வடையாக தட்டி பொன்னிறமாக இருபுறமும் திருப்பிப் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இந்த வடை புளிப்பு சுவையுடன் அருமையாக இருக்கும்.

அவ்வளவுதான் அருமையான சுவையில் மாங்காய் வடை தயார்.