Health Tips: நாளொன்றுக்கு 15 டீ, காபி குடிக்கிறீங்களா? முக்கிய தகவல் இங்கே.!
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை சாப்பிடாமல் பலரும் டீ, காபி, சிகிரெட் போன்ற விஷயங்களுக்கு அடிமையாகி இருப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மே 09, சென்னை (Chennai News): டீ, காபி போன்றவற்றை அறியாத முந்தைய தலைமுறை தினமும் காலை எழுந்த பின்னர் இளநீர், நுங்கு உட்பட பிற பழச்சாறுகளை வாங்கி குடித்தது. ஆனால், இன்று எங்கு திரும்பினாலும் டீ, காபி கடைகள் நிறைந்துவிட்டன. டீ, காபி குடிப்பது ஒருநாளைக்கு ஒன்று என்றால் பிரச்சனை இல்லை. ஆனால், ஒருசிலர் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறை வரை டீ, காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதுதவிர்த்து சிலர் மது, புகைக்கும் அடிமையாக இருக்கின்றனர். மனஅழுத்ததில் இருப்போர் அதன் தற்காலிக விடுதலை என நம்பி டீ, காபி, சிகிரெட், மது உட்பட போதை பொருட்களை கையில் எடுக்கின்றனர். Kungumapoo: குங்குமப்பூ நன்மைகள்.. உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற பயன்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
டீ, காபியின் தாக்கம்:
அதாவது, நாம் அதிகம் டீ, காபி எடுத்துக்கொள்ளும்போது உடலில் இருக்கும் காபின் மூலப்பொருள் காலப்போக்கில் நமது அமைதியின்மை, பதற்றம், தூக்கமின்மை, வயிற்றுவலி, வாந்தி, குமட்டலுக்கு காரணமாக அமைகிறது. இவை தவிர்த்து இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனையை உண்டாக்குகிறது. பின்னாளில் இந்த விஷயம் இரத்த சோகை தொடர்பான விஷயத்தையும் ஊக்குவிக்கிறது. இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மரணமும் ஏற்படுகிறது.
டீ, காப்பிகே இந்த நிலைமை என்றால், அதனுடன் மது, புகையையும் எடுத்துக்கொண்டால் எப்படியான பாதிப்பை உடல்நலம் எதிர்கொள்ளும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
(The above story first appeared on LatestLY on May 09, 2025 07:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

