Birth Control Medicines: அச்சச்சோ.. கருத்தடை மாத்திரைகளை உபயோகம் செய்தால் இவ்வுளவு பிரச்சனைகளா?.. பதறவைக்கும் தகவல்.. தம்பதிகளே உஷார்.!

கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் விற்பனை, கொரோனா காலங்களில் காண்டம் விற்பனை அபரிதமாக அதிகரித்து இருக்கிறது என அதனை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அறிக்கை அளித்தன.

Birth Control Medicines: அச்சச்சோ.. கருத்தடை மாத்திரைகளை உபயோகம் செய்தால் இவ்வுளவு பிரச்சனைகளா?.. பதறவைக்கும் தகவல்.. தம்பதிகளே உஷார்.!
File Image: Couple Shock

டிசம்பர், 11: கருத்தடை மற்றும் கருத்தடை சாதனங்கள் (Birth Control), மாத்திரைகள் என்பதை நாம் எங்கோ ஒரு இடங்களில் காதுகளால் கேட்டிருப்போம். ஆனால், கொரோனா காலங்களில் காண்டமும் (Condoms), கருத்தடை சாதனம் விற்பனையும் அபரிதமாக அதிகரித்து இருக்கிறது என அதனை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அறிக்கை அளித்தன. அதனைப்போல, கர்ப்பத்தை தவிர்க்க பயன்படும் மாத்திரைகளின் விற்பனையும் அதிகரித்து இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கருத்தடை சாதனம் என்றால் பெரும்பாலும் ஆணுறை உபயோகம் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இன்றளவில் அதற்கென உள்ள பல மருந்துகள், மாத்திரைகள், சாதனங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் மாத்திரைகளின் பயன்பாடு ஏகபோகம் என்றுதான் கூற வேண்டும். ஆன்லைன் மோகம், திரைக்காதல் ஈர்ப்பு (Affair & Sexual Relationships) என திருமணத்திற்கு முன்பே துணையுடன் தனிமையில் இருக்கின்றனர்.

இவ்வாறானவர்கள் ஏதோ ஒரு சூழலில் கர்ப்பமாகிவிடும் (Pregnant) பட்சத்தில், அதனை கலைக்க முற்படுகின்றனர். சிலர் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். உணர்ச்சி வேகத்தில் துணையுடன் கூடுவிட்டு கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக மூன்று மாதம் எடுத்துக்கொண்டால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பெரும் பாதிப்பை சந்திக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்படும் நேரங்களில் கருவுறுதலையும் அவை பாதிக்கின்றன. பிற உடல், மனநல பிரச்சனையும் ஏற்படுகிறது. December Month Politicians: டிசம்பர் மாதத்தில் பிறந்து அரசியலில் இந்திய அளவு பெருமைபெற்ற அந்த நபர்கள் யார் யார்? தெரியுமா.. விபரம் உள்ளே..! 

மருத்துவர்களின் பரிந்துரை இன்றி அலட்சியமாக ஆர்வக்கோளாறில் செய்த தவறை மறைக்க எண்ணி கருத்தடை எடுத்துக்கொண்டால் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது. பெண்ணொருவர் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டால் எந்தெந்த பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக தெரிந்துகொண்டு சுதாரித்து செயல்படுவது நல்லது.

கருத்தடை மாத்திரையை பெண் உபயோகம் செய்யும் பட்சத்தில், அதனை மாதத்தில் 21 நாட்கள் எடுத்துக்கொண்டால் கருவுறுதல் தவிர்க்கப்படும். இவ்வகை மாத்திரைகள் பெண்ணின் இனப்பெருக்க ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஈஸ்டிரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை கட்டுப்படுத்தி கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க வைக்கும். மாதவிடாய் சுழற்சியை 28 - 30 நாட்களுக்கு ஒருமுறை என சீரமைக்கும்.

மாதவிடாய் சுழற்சிக்கு (Periods) பின்னர் 21 நாட்கள் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை எடுத்துக்கொண்டால் மட்டுமே கருவுறுதலை தவிர்ப்பது சாத்தியம். ஒருநாள் மறந்து மாத்திரையை தவறவிட்டாலும் கருவுறுதல் நிகழ வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு கர்ப்பப்பை குழாயிலேயே கரு உருவாகிவிடும். பெண் மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக கருத்தடை மாத்திரைகளை மாதக்கணக்கில் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் கட்டாயம் ஏற்படும்.

மார்பக வலி, உடலெடை அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சனையும் ஏற்படும். சில நேரங்களில் பக்கவாதமும் ஏற்படலாம். மூளை இரத்த நாளத்தில் இரத்தத்தையும் உறைய வைக்கலாம். அதேபோல, கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது தலைவலி, காய்ச்சலுக்கான உள்ள மாத்திரைகளை உடல்நலம் குன்றி இருந்தாலும் எடுத்துக்கொள்ள கூடாது. அது கருத்தடை மாத்திரையின் வீரியத்தை கட்டுப்படுத்தி, கரு உருவாகும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.

Note: கருத்தடை மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்வது உயிருக்கும், எதிர்காலத்திற்கும் கேடினை ஏற்படுத்தலாம். இயன்றளவு கருத்தடை மாத்திரைகள், நவீன யுகத்தில் உள்ள கருத்தடை சாதனங்கள் போன்றவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. மருத்துவரின் அனுமதி இன்றி எக்காரணம் கொண்டும் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 04:08 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).