Aadi Thiruvathirai 2025: ஆடி திருவாதிரை 2025.. கங்கைகொண்ட சோழபுரத்தில் கோலாகலம்..!
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா இன்று (ஜூலை 23) மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஜூலை 23, சென்னை (Festival News): ஆடி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை 'ஆடி திருவாதிரை' என்பர். இந்த 2025ஆம் ஆண்டு ஆடி திருவாதிரை (Aadi Thiruvathirai) ஜூலை 23ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானுக்குரிய விரதமிருந்து வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இந்நாளில், பக்தர்கள் இறைவனை வழிபட்டு, சிறப்பு பிராத்தனைகள் செய்வார்கள். Aadi Velli 2025: ஆடி முதல் வெள்ளிக்கிழமை.. அம்பிகையின் அருளை பெறுவது எப்படி..?
ஆடி திருவாதிரை:
இந்நாளில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 23) அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழர் கால தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், சோழகங்கம் என அழைக்கப்படும் பொன்னேரி ஏரியில் ரூ.12 கோடி மதிப்பில் நீர்வள மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அப்பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற ரூ.7.25 கோடி மதிப்பில் திட்டத்தை அறிவித்துள்ளார். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

