டிசம்பர் 11, சென்னை (Kitchen Tips): சோயா சங்க்ஸ்களை வைத்து செய்யப்படும் இந்த மிளகு கிரேவியை எளிதாக அரை மணி நேரத்திலேயே செய்துவிடலாம். இதனை சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதில், புரதச்சத்து நிறைந்துள்ளது. குறைந்த கலோரிகள் உள்ளதால், இதை உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தாராளமாக சாப்பிடலாம். சோயா மிளகு கிரேவி (Soya Pepper Gravy) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். Drumstick Pickle Recipe: முருங்கைக்காய் ஊறுகாய் அசத்தலான சுவையில் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
சோயா - 100 கிராம்
மிளகு - 1 கரண்டி
சோம்பு - கால் கரண்டி
சீரகம் - கால் கரண்டி
வரமிளகாய் - 4
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
பட்டை - ஒரு இன்ச்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி, பெரிய வெங்காயம் - தலா 1
மல்லித் தூள் - 1 கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி
மஞ்சள் தூள் - கால் கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வர மிளகாய் ஒரு கரண்டி மிளகு, சோம்பு சீரகத்தை ஒரு கொதி வட்டவுடன் ஆறிய பின்பு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு, சோயாவை சுடுதண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த சோயாவில் அரைத்த பேஸ்டை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஊறவிடவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்பு ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- சிறிது உப்பு சேர்த்து நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் மஞ்சள் தூள் மல்லித் தூள் சேர்த்து கிளறிவிட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை போன பின்பு ஊறவைத்த சோயாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான சோயா மிளகு கிரேவி ரெடி.