Dindigul Thadikombu Hospital Fire Accident Visual from Spot (Photo Credit: @HateDetectors X)

டிசம்பர் 13, தாடிக்கொம்பு (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பகுதியில் வசித்து வருபவர்கள் மாரியம்மாள் (வயது 50). இவரின் மகன் மணி முருகன் (வயது 28). தேனியைச் சேர்ந்தவர் சுருளி (வயது 50), இவரின் மனைவி சுப்புலட்சுமி (வயது 45). திண்டுக்கல்லில் உள்ள என்ஜிஓ காலனியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரின் மகள் கோபிகா (வயது 6).

லிப்டில் சிக்கிக்கொண்டனர்:

இவர்கள் அனைவரும் பழனி, தாடிக்கொம்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு (Dindigul Hospital Fire Accident) சென்று, லிப்டில் சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம், மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின்னிணைப்பு அடுத்தடுத்து துண்டிக்கப்பட்டு, லிப்டில் பலரும் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உட்பட 27 மாவட்டங்களுக்கு மழை; குடை முக்கியம் மக்களே.. விபரம் இதோ..! 

32 பேர் மீட்பு:

வேறொரு லிப்டில் இருந்த 6 பேர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், மேற்கூறிய 7 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரில், மூவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களைத் தவிர்த்து, மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்த 32 க்கும் மேற்பட்டோர், 25 அவசர ஊர்திகள் உதவியுடன் மீட்கப்பட்டு, அங்கிருக்கும் பிற மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.

விசாரணை நடைபெறுகிறது:

நான்கு மாடிகள் கொண்ட மருத்துவமனை வளாகத்தில், முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சட்டப்பேரவை உறுப்பினர் என பலரும் நேரில் வந்து ஆய்வும் மேற்கொண்டனர்.

மருத்துவமனை வளாகத்தில் தீப்பிடித்தபோது பதிவு செய்யப்பட்ட பதறவைக்கும் காணொளி:

அமைச்சர் ஆர். சக்கரபாணி, நிகழ்விடத்தில் ஆய்வு செய்தபோது: