தொடங்கிய வேகத்தில் முடிந்த வாழ்க்கை.. காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!
ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி, ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 18, மலப்புரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் மணலோடி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 23). அங்குள்ள குரன்குளம் கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் அம்ருதா (வயது 18). இவர்கள் இருவரும் முதலில் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. உயிருக்கு உயிராக காதலித்த இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மணலோடி பகுதியில் தனியாக வீடு எடுத்து இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். ராஜேஷின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரும் இதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இளம் காதல் ஜோடி தற்கொலை:
இதனிடையே அமிருதாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக தனது உறவினரின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்த நிலையில் தனது தாயாருடன் வீட்டிலிருந்த ராஜேஷ் இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் உயிரிழந்தது தெரியாத தாய், தனது மகனின் உடலை ஷோபாவில் வைத்து குழந்தை போல பார்த்து கொண்டுள்ளார். உறவினர் வீட்டிற்கு சென்ற அமிருதா திரும்பி வந்து பார்த்தபோது தனது கணவர் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 65 வயதுடைய தாய்க்கு தண்டனை தருவதாக 2 முறை பாலியல் வன்கொடுமை.. 39 வயது மகன் அதிர்ச்சி செயல்.!
சோகத்தில் உறவினர்கள்:
பின் இது தொடர்பாக தனது மாமியாரிடம் விசாரித்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனால் மாமியாரை பொறுத்தவரையில் மகன் உயிரிழப்பதற்காக அவ்வாறு செய்தார் என தெரியாமல் தனது மகன் செய்த செயலை மருமகளிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அமிர்தா தன் கணவர் தற்கொலை செய்துகொண்ட அதே கயிற்றில் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
காவல்துறை விசாரணை:
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எதற்காக ராஜேஷ் தற்கொலை செய்துகொண்டார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்தில் கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 18, 2025 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

