Andhra Pradesh Eluru Temple Theft: வடிவேலு ஸ்டைலில் சாமி கும்பிட்டப் படியே ஆத்தாவிடம் ஆட்டையப் போட்ட திருடர்.. வைரலாகும் வீடியோ..!
ஆந்திர மாநிலம் எலுரு சத்திரம்பாடு சவுபாக்யலட்சுமி கோவிலில் பக்தர் போல் வேடமணிந்து வந்த நபர், திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 08, எலுரு (Andhra Pradesh News): ஆந்திர மாநிலம் எலுரு சத்திரம்பாடு சவுபாக்யலட்சுமி கோவிலில் )Andhra Pradesh Eluru Temple) பக்தர் போல் வேடமணிந்து வந்த திருடர், திடீரென்று சமிடம் இருந்த தாலியை, யாரும் இல்லாத நேரம் பார்த்து திருடியுள்ளார். இந்த நிகழ்வானது கோவிலின் சிசிடிவி வீடியோவில் பதிவாகியது. அவர் 7 சவரன் தங்கத்தை திருடிச் சென்றுள்ளார். அந்த நபரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். Pushpa 2 The Rule Teaser: இரண்டு புஜங்களையும் முறுக்கி கொண்டு வரும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா தி ரூல் படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு..!
அவரை பிடிக்க ஏலூர் மாவட்ட காவல் துறை அதிகாரி டி.மேரி பிரசாந்தி தனிப்படை அமைத்துள்ளார். இதுகுறித்து ஏளூர் மூன்று நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பூசாரி மற்ற பக்தர்களுக்கு ஆசி வழங்கும் போது திருட்டு நடந்ததாக ஏளூர் மூன்று நகர வட்ட ஆய்வாளர் டி.வெங்கடேஸ்வர ராவ் தெரிவித்தார். இந்த திருட்டு சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"Oh God! Temple Deity Mangalsutra Stolen"
In Andhra Pradesh's Eluru Satrampadu, a shocking incident occurred at the Saubhagyalakshmi temple.
A man, pretending to be a devotee, committed a theft. He was captured on CCTV while he was stealing a mangalsutra from the deity's neck.… pic.twitter.com/QQg8z4h8Bj— Sudhakar Udumula (@sudhakarudumula) April 7, 2024
(The above story first appeared on LatestLY on Apr 08, 2024 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

