ஆகஸ்ட் 13, வதோதரா (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தைச் சார்ந்த 40 வயது பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2024 திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பெண்ணுக்கு 40 வயது ஆகிய நிலையில் கருவுறுதல் பிரச்சனை காரணமாக புதுமணத்தம்பதி மருத்துவரை அணுகியதாக கூறப்படுகிறது. தம்பதிக்கு பரிசோதனை செய்த மருத்துவர் கணவரின் விந்தணுவில் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குழந்தையை தத்தெடுக்க மறுப்பு தெரிவித்த குடும்பம் :
இயற்கையான முறையில் கருத்தரிக்க இயலாது என்றும், செயற்கை கருத்தரிப்பு முறையை முயற்சி செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தம்பதிகள் இருவரும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். Shocking Video: உடலெல்லாம் காயங்கள்.. 15 மாத குழந்தையை கிள்ளி, சுவற்றில் முட்டி தாக்கிய பெண்ணின் பதறவைக்கும் வீடியோ.!
மருமகளை பலாத்காரம் செய்த மாமனார் :
இதனிடையே கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண்ணை அவரின் மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார். அப்போது எனக்கு குழந்தை வேண்டும் என்பதால் இது குறித்து நீ வெளியே கூறக்கூடாது என கணவர் கூறியுள்ளார். மேலும் இதனை மீறி இந்த விஷயத்தை வெளியே கூறினால் நிர்வாண போட்டோவை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார்.
வாரிசு வேண்டுமென மாமனார், கணவரின் தங்கை கணவர் மாறிமாறி பலாத்காரம் :
இதனை பயன்படுத்தி மாமனார் தனது மருமகளை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னும் பெண் கருத்தரிக்கவில்லை. இதனால் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என கடந்த 2024 டிசம்பர் மாதம் முதல் கணவரின் தங்கை கணவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவங்கள் பல மாதங்களாக தொடர்ந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் பெண் கருத்தரித்து இருக்கிறார்.
கலைந்த கரு :
பின் சில வாரங்களில் கரு கலைந்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி கயவர்களின் தீராத தொல்லை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தற்போது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகி தேசிய அளவில் மிகப்பெரிய விவாதங்களையும் உண்டாக்கி இருக்கிறது.