Sleeping Divorce: தனித்தனி படுக்கையில் உறங்கி தூக்க விவாகரத்து கொடுத்த தம்பதி; புது டெக்னீக், மகிழ்ச்சியில் வாழ்க்கை.!
மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் தம்பதி தூக்க விவாகரத்து பெற்று இருக்கின்றனர். அவர்களின் விவாகரத்துகள் காரணம் குறைந்து தெரிந்துகொள்ளுங்கள். இளம் தம்பதியின் செயல்முறை பல விவகாரத்துகளை குறைக்க வழிவகை செய்யும் நோக்கத்துடன் அமைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 25, போபால் (Bhopal): மனித வாழ்க்கையில் உணவு, உடை, இருப்பிடம் என எண்ணற்ற விஷயங்கள் மிகமிக முக்கியமானது ஆகும். பணம் இருக்கும் செல்வந்தர்கள் முதல் அனுதினமும் உடல் உழைப்பை தீவிரமாக வெளிப்படுத்தி உழைப்பவர்கள், இரவு நேரத்தில் உறங்குவது இயல்பு. இந்த உறக்கம் அனைவர்க்கும் நிம்மதியமாக அமைவது இல்லை. வேலையில் இருக்கும் பிரச்சனை, எதிர்காலம் குறித்த பயம் உட்பட பல்வேறு காரணிகளால் அவை தடைபடுவது உண்டு. ஒருசில நேரம் குறட்டை போன்ற விசயத்தாலும் உறக்கம் என்பது கேள்விக்குறியாகும்.
உடல்-உழைப்பால் இருவருக்கும் அசதி:
அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் வசித்து வரும் தம்பதியின் குறட்டை சார்ந்த பிரச்சனைக்கு, தம்பதிகள் படுக்கை விவாகரத்து எனப்படும் (Sleeping Divorce for Couples) முறையை பின்பற்றி தங்களின் நிம்மதியான உறக்கத்தை மேற்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, போபாலை செர்ந்த சுமித் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி தினமும் வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இதனால் ஏற்படும் உடல் உழைப்பு காரணமாக, அவர் தூங்கும்போது குறட்டைவிடும் வழக்கத்தை கொண்டுள்ளார். Hair Fall: முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்ளும் இளம்பெண்கள்.. காரணம் என்ன?.. அதிர்ச்சி தகவல்.!
நிம்மதியான உறக்கத்தை எதிர்நோக்கி:
தொழில்நுட்ப உலகில் ஆண் - பெண் என இருபாலரும் உழைக்க தொடங்கிவிட்டாலும், அலுவலகத்தில் சென்று பணியாற்றிவரும் ஆணைப்போல, பெண்ணுக்கும் வீட்டில் சரிக்கு சமமாக காலை உணவை தயார் செய்வது, மதியம் கணவருக்கு உணவு கொடுத்து அனுப்புவது, குழந்தைகளை பராமரிப்பது, வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வது, துணிகளை துவைப்பது, அவர்களின் உடலநலத்தையும் கவனிப்பது என பல வேலைகள் தொடர்ந்து இருக்கின்றன. இதனால் இருவரின் உடல் உழைப்பும் சரிக்கு சமமாக சமமாக தீர்ந்து, இருவரும் இரவு நேரத்தில் படுக்கையில் நிம்மதியான உறக்கத்தை எதிர்நோக்குகின்றனர்.
தனித்தனியாக உறங்கும் தம்பதி:
ஆனால், சுமித்தின் மனைவி குறட்டை காரணமாக, கணவர் தனது தூக்கத்தை இழந்துள்ளார். இதனால் சில மாதங்களில் அவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டு உடல்நல கோளாறுகளையும் எதிர்கொண்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட தம்பதிகள், அவர்கள் கூறிய ஆலோசனையை பின்பற்றி இருக்கின்றனர். அதன்படி, இருவரும் தனித்தனி படுக்கை அறையில் உறங்கி இருக்கின்றனர். சமீபத்தில் தம்பதிகளின் வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர், அவர்கள் தனித்தனியே உறங்குவதை கவனித்து இருக்கிறார். Egg Rice Recipe: வித்தியாசமான முறையில் முட்டை சாதம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
தனியாக உறங்கினாலும் மகிழ்ச்சியே:
இதனால் அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என கேட்டு இருக்கிறார். அப்போதுதான் அவர்கள் தங்களின் படுக்கை விவாகரத்து குறித்து கூறி இருக்கிறார்கள். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அதேவேளையில், உறவு உறக்கத்தின்போது மட்டும் தனித்தனியே உறங்குகின்றனர். இயல்பான தம்பதிகளை போல தங்களின் மகிழ்ச்சியான நினைவுகள், கொஞ்சல்கள், ஊடல்-கூடல் என வாழும் தம்பதியில் எள்ளளவும் காதல் குறையாமல் இருப்பதாக நெகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களின் நண்பரிடம் தெரிவித்துள்ளனர்.
குறட்டைக்காக விவாகரத்து வாங்கிய சில தம்பதிகள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறானவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு இருந்தால் உங்களின் அனுப்புக்குரிய நபரை பிரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று இந்நேரம் தோன்றலாம்..
(The above story first appeared on LatestLY on Jul 25, 2024 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

