டிசம்பர் 07, பாட்னா (Bihar News): இந்தியாவில் நடைபெறும் பெரும்பான்மையான குடும்ப சண்டைகளுக்கு வரதட்சணை சார்ந்த விஷயங்களே என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்பதை மக்கள் சட்டமாக நினைக்காமல், நமது உழைப்பில் நாம் வாழ வேண்டும் என எண்ணுவதே சரியான தீர்வை தரும்.
அழகிய குடும்பம்: பீகார் மாநிலத்தில் உள்ள சாம்பரான் மாவட்டம், ராமக்யா கிராமத்தில் வசித்து வருபவர் அரவிந்த் யாதவ். இவரின் மனைவி ரேணுகா தேவி (வயது 24). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
வரதட்சணை கொடுமை: இருவரின் அன்புக்கு அடையாளமாக 4 வயதுடைய மகன் ராஜா பாபு, 2 வயதுடைய ரிஷப் குமார் ஆகியோர் பிள்ளைளாக இருக்கின்றனர். மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அரவிந்த் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தாக தெரியவருகிறது.
சிறைக்கு சென்று வருகை: இதுதொடர்பாக கடந்த ஆண்டு மனைவி மற்றும் அவரது பெற்றோர் சார்பில் சஹாப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அரவிந்த் யாதவ் சிறைக்கு சென்றும் வந்துள்ளார். சிறைக்கு சென்று வந்தவர், மனம்திருந்தி மனைவியுடன் வாழ்ந்து வந்ததாக தெரியவருகிறது. Delhi Winter Vacation: டெல்லியில் குளிர்கால விடுமுறை தேதிகள் அதிரடி மாற்றம்: மாநில கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! காரணம் என்ன?..!
மீண்டும் சண்டை: இதனிடையே, மீண்டும் வரதட்சணை தொடர்பான பிரச்சனை எழுந்து, குடும்பத்திற்குள் சண்டை உண்டாகியுள்ளது. நேற்று தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அரவிந்த் யாதவ், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.
அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம்: பின் தனது வீட்டில் இருந்து தப்பி சென்றிருக்கிறார். இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, கேசரியா காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவானவருக்கு வலைவீச்சு: சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் குற்றவாளியான அரவிந்த் யாதவை தேடி வருகின்றனர். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.