8 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தொல்லை.. 48 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!
பாலத்துக்கு அடியில் மாற்றுத்திறனாளி சிறுமியை அழைத்துச் சென்ற நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட நபர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 26, தண்டையார்பேட்டை (Chennai News): சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் 8 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் காது கேட்காத, வாய்பேச இயலாத மாற்றுத்திறன் சிறுமி ஆவார். இப்பகுதியில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருபவர் துரை (வயது 48). சம்பவத்தன்று துரை சிறுமியை நேப்பியர் பாலத்துக்கு கீழ் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பால்கனியில் கம்பிக்குள் நுழைந்து விளையாட்டு.. 6 வயது சிறுவனுக்கு 6வது மாடியில் காத்திருந்த எமன்.. கண்ணீர் சோகம்.!
கை-கால்களை முறித்துக்கொண்டார்:
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துரையை சுற்றி வளைத்து கைது செய்தனர். பாலத்துக்கு மேல் வந்த துரை, அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்து திடீரென பாலத்தின் கீழே குதித்தார். இதனால் அவரின் கை-கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டு அலறித்துடித்தார்.
காயமடைந்த துரையை பத்திரமாக மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

