செப்டம்பர் 29, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் - மதுரை (Dindigul Madurai Road) சாலையில் அமைந்துள்ள பூச்சிநாயக்கன்பட்டி, பேகம்பூர் பகுதியில் வசித்து வருபவர் சம்சுதீன். இவரின் மகன் முகமது இர்பான் (வயது 24), இர்பானின் நண்பர் முகமது அப்துல்லா (வயது 25). இர்பான் உள்ளூரில் ரௌடியாக வலம்வந்ததாக தெரியவருகிறது. இதனிடையே, நேற்று இவர்கள் இருவரும், இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்துள்ளனர். பின் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
ரௌடியின் நண்பர் தப்பினார்:
இந்நிலையில், பென்சனர் காம்பவுண்ட் சாலையில் சென்றபோது, இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களை முந்திச்சென்று வழிமறித்து நின்றது. தன்னை மர்ம நபர்கள் சுற்றியுள்ளதை உணர்ந்த இர்பான் மற்றும் அவரின் நண்பர் அப்துல்லா சுதாரிப்பதற்குள், பயங்கர ஆயுதத்தால் (Dindigul Rowdy Killed) சரமாரியாக தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அப்துல்லா வெட்டுக்காயத்துடன் தப்பியோடினார். அவரை மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். Udhayanidhi Stalin: "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்" துணை முதல்வராக பொறுப்பேற்கிறார் உதயநிதி; கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்.! அமைச்சரவை மாற்றம் குறித்த விபரம் உள்ளே.!
20 வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றவாளி படுகொலை:
கொலையாளிகள் கையில் சிக்கிய இர்பானை சரமாரியாக தாக்கிய கும்பல், தலையை வெட்டி முகத்தை கொடூரமாக சிதைத்து கொலை சம்பவத்தை அரங்கேற்றி தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் இர்பான் நிகழ்விடத்திலேயே துள்ளத்துடிக்க உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை மற்றும் கொலை முயற்சி என 20 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரௌடி இர்பான் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
4 நாட்களில் 3 பேர் கொடூரமாக கொலை:
இவர்களை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமா? என மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் 3 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன. 2 நாட்களுக்கு முன்பு வடமதுரையில் தயாள வர்மா என்பவரும், வேடசந்தூரில் திமுக பிரமுகர் மாசியும் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரௌடி இர்பான் கொல்லப்பட்டுள்ளார்.
பூட்டுக்கு மட்டுமா? போட்டுத் தள்ளுறதுக்கும் தான்?:
ஒருகாலத்தில் பூட்டுக்கு மட்டுமே மௌசு ஏற்பட்டு, திண்டுக்கல் என்றாலே பூட்டு என பேமஸ் ஆக இருந்த மாவட்டம், இன்று கொலைகளின் நகரமாக மாறி வருகிறது. ரௌடியிசத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இர்பான் கொலை செய்யப்பட்டு, சாலையோரம் கிடந்த அவரின் உடல்:
*திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபர் இக்பால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை சம்பவ இடத்தில் நகர் வடக்கு போலீசார் விசாரணை*
*திண்டுக்கல்லில் நான்கு நாட்களில் மூன்று கொலை மீண்டும் கொலை நகரமாகும் திண்டுக்கல்* pic.twitter.com/2238CkWaeY
— Arunachalam E (@Arunach04454821) September 28, 2024