
ஜூன் 21, கன்னியாகுமரி (Kanyakumari News Today): கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் உள்ள கிராமத்தில் 35 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அவர் வேலை பார்க்கும் துணிக்கடையில் பெண்ணுக்கு அறிமுகமான பள்ளி தோழரான 35 வயதுடைய இளைஞர் அவ்வப்போது வந்து துணி எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு சென்ற பெண்மணி :
இதனால் பள்ளி தோழியை அவ்வப்போது நேரில் சந்தித்து பேசுவதும் வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். பின் மீண்டும் இரவு 9 மணியளவில் குழித்துறை சந்திப்பில் இறங்கி இருக்கிறார். பின் வீட்டுக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். Dindigul News: பள்ளி வளாகத்தில் நடந்த சோகம்.. உணவு சாப்பிட்ட மாணவிக்கு காத்திருந்த எமன்.!
வீட்டிற்கு வர அறிவுறுத்திய நண்பர் :
அச்சமயம் காரில் வந்த வாலிபர் பெண்ணை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறியுள்ளார். உடன் படித்தவர் என்பதால் நட்பு ரீதியில் அவரும் சென்ற நிலையில், சிறிது தூரம் சென்ற வாலிபர் வேறொரு பாதைக்கு சென்று இருக்கிறார். இது குறித்து பெண் கேட்கையில் எனது வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
வாயைப்பொத்தி பாலியல் பலாத்காரம் (Woman Sexual Abused):
நண்பர் என்பதால் சந்தேகப்படாத பெண்மணி தொடர்ந்து பயணித்த நிலையில், வீட்டுக்குள் சென்றபோது யாருமில்லை. இதனை தொடர்ந்து வீட்டின் கதவை மூடிய வாலிபர் பெண்ணின் வாயைப்பொத்தி (Kanyakumari Women Rape) வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்த விஷயம் குறித்து வெளியே கூறினால் உன்னையும், குழந்தைகளையும், கணவரையும் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
கணவரிடம் கதறிய பெண்மணி :
இதனால் பயந்துபோன பெண்மணி வீட்டிற்கு சென்ற நிலையில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். மன உளைச்சலில் தவித்த அவர் செய்வதறியாது இருந்துள்ளார். இதனிடையே கணவர் என்ன விஷயம்? என்று கேட்டபோது நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி மற்றும் அம்மாவிடம் இது குறித்து கூறுமாறு அறிவுறுத்தி பெண்ணை அனுப்பி வைத்துள்ளார்.
நண்பரின் குடும்பத்தினர் தாக்குதல் :
அங்கு பெண் சென்றபோது இளைஞரின் மனைவி, தாயார் இருந்துள்ளனர். வாக்குவாதத்தில் பெண்ணிடம் தகராறு செய்த குடும்பத்தினர் அவரை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.