மே 03, கோழிக்கோடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கரும்புகை சூழ்ந்தது. நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த இடத்திலும் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதால் பலரும் பதறிப்போயினர். Temple Stampede Death: கூட்டநெரிசலால் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்.. கோவில் வளாகத்தில் 6 உயிர் பலி.!
4 பேர் பலி, 200 பேர் பத்திரமாக மீட்பு:
மருத்துவ உதவியாளர்கள், உறவினர்கள் துணையுடன் பல நோயாளிகள் அவசர கதியில் மருத்துவமனை வளாகத்தின் வெளியே அழைத்து வரப்பட்டனர். இதனிடையே, தீ விபத்தின் காரணமாக எழும்பிய கரும்புகையில் சிக்கி 4 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமான பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தோரின் உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் விபத்தின்போது பதிவு செய்யப்பட்ட காணொளி:
Smoke spread in the UPS room of the Kozhikode Medical College Hospital Emergency Department on Friday night and patients in the ICU were evacuated. No one was injured.@MSKiranPrakash @PaulCithara @GOKULCHELIYA #KozhikodeMedicalCollege #Smoke #Kozhikode #Kerala pic.twitter.com/o0OkI4owRB
— TNIE Kerala (@xpresskerala) May 2, 2025