ஏப்ரல் 28, திலகர் திடல் சரகம் (Madurai News Today): மதுரை மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 10 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். சிறுமிக்கான உணவை ஸ்விக்கியின் ஊழியர் ஆண்டனி டேவிட்ராஜ் என்பவர் எடுத்து வந்தார். உணவை டெலிவரி செய்தவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. Sivagangai News: பண்ணையில் திமுக பிரமுகருக்கு ஸ்கெட்ச்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.. பறிபோன உயிர்.!
பாலியல் சீண்டல்:
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இந்த விஷயம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஆண்டனியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.