மே 05, மதுரை (Madurai News Today): ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன் (வயது 61). இவர் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். பாஸ்கரனுக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, அங்குள்ள பேரூர், செட்டிபாளையம் பகுதியில் வசித்து வந்த கவிதா மணி என்ற பெண்ணுடன் பாஸ்கரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு மகன் இருகிறார். Breaking: லாரி - வேன் மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் துள்ளத்துடிக்க பலி.!
கடன் தொல்லையால் விபரீதம்:
இந்நிலையில், கடந்த 1ம் தேதியன்று மதுரைக்கு வைத்த தம்பதி, மாட்டுத்தாவணி விடுதியில் தங்கி இருந்தது. பின் மதுரை மாநகரின் பல இடங்களுக்கும் சென்று வந்தவர்கள், நேற்று நள்ளிரவு நேரத்தில் தற்கொலை செய்துகொண்டனர். இருவரும் தங்களுக்கு கடன் உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்வதாகவும் கடிதத்தில் எழுதியுள்ளனர். Trending Video: மருத்துவரை கட்டி வைத்து அடித்த மக்கள்.. இரத்தம் சொட்ட சொட்ட நிகழ்ந்த பயங்கரம்.!
காவல்துறை விசாரணை:
இவர்கள் தங்கியிருந்த அறையில் நேற்று நீண்ட நேரமாக நடமாட்டம் இல்லாததால் விடுதி நிர்வாகம் சார்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதூர் காவல்துறையினர் வந்து பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்தனர். இதனால் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..