Girl Student Death Caught by Camera (Photo Credit: YouTube)

ஏப்ரல் 05, பரந்தா நகர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பரந்தா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில், மாணவி ஒருவர் பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசும்போதே மரணம் அடைந்த சோகம் நடந்துள்ளது. சக மாணவ - மாணவியர்கள், ஆசிரியர்கள் கண்முன் மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவி, சிரித்த பின்னர் நொடியில் மயங்கிச் சரிந்து உயிரிழந்தார். பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி உயிரிழந்த சோகத்தின் இறுதி காட்சிகளும் வெளியாகியுள்ளன. Watch: மூர்ச்சையாகி மயங்கி விழுந்த தொண்டர்.. சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்எல்ஏ.! 

மாணவிக்கு மேடையிலேயே நேர்ந்த சோகம்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாராஷிவ் மாவட்டம், பரந்தா நகர், ஆர்.ஜி ஷிண்டே மகா வித்யாலயா கல்லூரியில் பயின்று வரும் மாணவி வர்ஷா காரத். இவர் மூன்றாம் ஆண்டு அறிவியல் துறையில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று பிரிவு-உபசார விழாவில் கலந்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம் திடீரென மாணவி தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்முன் மயங்கி சரிந்தார். உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாணவர்கள் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

பேசிக்கொண்டு இருக்கும்போதே உயிரிழந்த மாணவி:

திடீரென மயங்கி விழுந்த மாணவி: