
மார்ச் 03, லத்தூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லத்தூர் மாவட்டம், நாக்பூர் - ரத்னகிரி தேசிய நெடுஞ்சாலையில், சகூர் தாலுகா, நந்தகோன் பாடி பகுதியில், அஃமத்புரில் இருந்து லத்தூர் நோக்கி பேருந்து ஒன்று பயணம் செய்தது. இந்த பேருந்து நந்தகோன் பாடி பகுதியில் வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகன ஓட்டி, அலட்சியமாக சாலையை கடக்க முற்பட்டார். அவரின் மீது பேருந்து மோதாமல் இருக்க வேண்டும் என பதற்றமடைந்த ஓட்டுநர், ஸ்டியரிங்கை வலப்புறமாக திருப்பினார். Woman Abuse Case: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாதிரியார் மீது வழக்குப்பதிவு..!
40 பேர் காயம்:
இதனால் வந்த வேகத்தில் நிலைதடுமாறி வாகனம், குடைசாய்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவிகள் என 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டியின் அவசரத்தால், அவரின் உயிரை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை, 40 பேரின் உயிருக்கும் எமனாகத்தெரிந்தது.
பேருந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்:
महाराष्ट्र के लातूर में हाइवे पर मोटरसाइकिल वाले को बचाने के चक्कर में बस पलटी..
15 से 20 यात्री घायल.
सीसीटीवी में पूरा हादसा कैद.
मोटरसाइकिल वाले की पूरी गलती नजर आ रही है.#Maharashtra pic.twitter.com/ydaOwCb0ED
— Vivek Gupta (@imvivekgupta) March 3, 2025