One Year Old Baby Dies by Heart Attack: ஒருவயது பச்சிளம் குழந்தை மாரடைப்பால் பலி., பிரேத பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
கைக்குழந்தை உள்ள பெண்ணுடன் டேட்டிங் செய்த நபர், 1 வயது குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணி கொடூரமாக அடித்தே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
மே 23, ஓஹியோ (World News): அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணம், ஹமில்டன் கவுண்டியில் வசித்து வரும் பெண்மணி அமினாடா கேல்டா. இவருக்கு பிறந்து ஓராண்டான கரீம் கேல்டா கைக்குழந்தை இருக்கிறது. கடந்த 3 மாதமாக அமினாடா 23 வயதுடைய எட்வர்ட் முர்ராய் என்பவருடன் டேட்டிங் உறவில் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வருவதும் வழக்கம் என கூறப்படுகிறது.
மாரடைப்பால் மரணம்: இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் தனிமையில் இருந்தபோது, அமினாடாவின் 3 வயது குழந்தை அழுதுள்ளது. அதனை அமைதியாக்க முடியாத காரணத்தால், ஒருகட்டத்தில் குழந்தையை கடுமையாக எட்வர்ட் முர்ராய் தாக்கி இருக்கிறார். இதனால் குழந்தை மயங்கி இருக்கிறது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Presidential Candidate Rally Stage Collapse: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து 5 பேர் பலி., 50 பேர் படுகாயம்... நூலிழையில் உயிர்தப்பிய வேட்பாளர்..!
2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: குழந்தையின் மரணம் மே 1ம் தேதி நடந்த நிலையில், 5ம் தேதி காவல்துறையினரின் கவனத்திற்கு விஷயம் சென்றுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது குழந்தையை தாக்கி மரணம் அடைந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு, மூளை சேதமாகி, கல்லீரல் பாதிக்கப்பட்டு, கண்களில் ரத்தம் உறைந்து உயிர்பலி ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் முரராய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து இருக்கின்றனர். குழந்தையை கொலை செய்ததாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 23, 2024 10:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

