ஜூன் 03, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம், சிசூலா கிராமத்தில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கார் சிஎன்ஜி எரிவாயு உபயோகம் கொண்டு இயங்கியதாக கூறப்படும் நிலையில், காரில் தீ பற்றி எரிந்து, அதில் பயணித்தவர்கள் வெளியே வர இயலாமல் தவித்துள்ளனர். இதனால் அவர்கள் வாகனத்துடன் தீயில் எரிந்து கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். Toll Tax Hike: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவு: சுங்கச்சாவடிகளில் 5% கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல் .!
கார் தீ பிடித்து நடந்த சோகம்: தகவல் அறிந்த ஜானி காவல் நிலைய அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பலியானோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் டெல்லியில் இருந்து ஹரித்வார் சென்றுள்ளனர். டெல்லி - மீரட் (Delhi Meerut Expressway) அதிவிரைவு சாலையில் இவர்கள் பயணித்தபோது கார் தீப்பிடித்து இருந்துள்ளது.
உடல்கள் அடையாளம் காணும் பணிகள் தீவிரம்: உயிரிழந்த அணிஅவரும் இளைஞர்களாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல்கள் டையாளம் காணும் பணிகள் நடிப்பேற்றுகின்றனா. வாகனத்தின் பதிவெண் வைத்து இவர்கள் டெல்லி பஹலத்பூர், ஓம்பிரகாஷ் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட அதிகரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை அடைந்து வருகிறது. கார் தீப்பிடித்து எரிவது குறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
CNG संचालित सेंट्रो कार सवार 4 लोगों को बाहर निकलने का मौका भी नहीं मिला। चारों जिंदा जल गए। कार दिल्ली निवासी सोहनपाल सिंह के नाम पर है।
📍मेरठ, उत्तर प्रदेश https://t.co/Vqx5c03HbZ pic.twitter.com/rpLDDEfnUE
— Sachin Gupta () June 2, 2024