LPG Cylinder Tax: கேஸ் சிலிண்டருக்கு 55% வரியா? தமிழக அரசு விளக்கம்.!
சமையல் எரிவாயுவிற்கு அரசு 55% வரி விதிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை தெளிவுபடுத்த உண்மையில் LPG சிலிண்டருக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது? என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 16, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் ஒவ்வொருவரின் வீட்டிலும் சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. நாம் சமைக்க உபயோகிக்கும் சமையல் எரிவாயுவிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் 5% வரியானது விதிக்கப்படுகிறது. இதனிடையே சமையல் எரிவாயுவிற்கு மாநில அரசு 55% வரியும், மாநில அரசு 5% வரியும் விதிப்பதாக சமூக வலைதளங்களில் சமீப காலமாக தகவல்கள் மிகப்பெரிய அளவில் பரவி வருகின்றன. வானிலை: 18 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடையோடு போங்க.!
சிலிண்டருக்கு 55% வரி?
மேலும் இதுகுறித்த தகவலை குறிப்பிட்டுள்ள சிலர் மக்களிடம் இருந்து யார் அதிகம் வரி பிடுங்குகிறார்கள் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கூறிய தகவல்களை சுட்டி காட்டியுள்ள உண்மை சரி பார்ப்பகம், இந்த தகவல்களில் உள்ள கூற்றுக்கள் தவறானவை எனவும், வதந்தி எனவும் குறிப்பிட்டுள்ளது.
சமையல் எரிவாயு வரி விபரம்:
சமையல் எரிவாயு ஜிஎஸ்டி வரி விகிதத்தின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசின் சார்பில் தலா 2.5 விழுக்காடு வரி என்ற அடிப்படையில் மொத்தமாக 5% வரி விதிக்கப்படுகிறது. பிற வரிகள் ஏதும் இல்லை. உண்மையற்ற தகவலை பரப்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்களை நம்ப வைக்க இதுபோன்ற பல வதந்திகள் சமூக வலைதங்களில் பரவிய வண்ணம் இருக்கின்றன. சில சமயம் உதவித்தொகை, வேலைவாய்ப்பு என குறிப்பிட்டு லிங்கை கிளிக் செய்யுமாறு மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணமும் திருடப்படுகிறது. இதனால் மக்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அறிவிப்பு :
சமையல் எரிவாயு: தமிழ்நாடு அரசு 55% வரி விதிப்பதாக வதந்தி ! @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/DvDeNQ5CT6
— TN Fact Check (@tn_factcheck) September 15, 2025
(The above story first appeared on LatestLY on Sep 16, 2025 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

