Man Killed By Lion: சிங்கத்துடன் செல்ஃபி.. கடுப்பான சிங்கம் அடித்து இளைஞர் உயிரிழப்பு..!
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில், சிங்கங்கள் கடுப்புக்குள் குதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 16, திருப்பதி (Tirupati): ராஜஸ்தானைச் சேர்ந்த பிரஹலாத் என்ற நபர், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். பூங்கா முழுவதும் அவர் தொடர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தார். அதனைத் தொடர்ந்து சிங்கம் இருந்த அடைப்புக்குள் குதித்து சிங்கத்துடன் செல்பி எடுக்க நினைத்துள்ளார். அவர் சிங்கம் அடைக்கப்பட்டு இருந்த தடுப்பில் ஏறி குதிக்க முயலும் பொழுது உயிரியல் பூங்கா உதவியாளர்கள் ஓடி வந்து அவரை தடுத்துள்ளனர். Tamil Nadu Board Exam: 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிங்கம் இருந்து கூண்டுக்குள் குதித்துள்ளார். இதனைப் பார்த்த சிங்கம் அவரை அடித்து கொன்று விட்டது. சிங்கத்துடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு பலியான இச்சம்பவம் திருப்பதி உயிரியல் பூங்காவையே பரபரப்பாக்கியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

