Gurpatwant Pannu Warning To India: "பஞ்சாபை காலிஸ்தான் நாடாக அறிவிக்கவில்லை என்றால் தாக்குதல்" - காலிஸ்தானிய பயங்கரவாதி இந்தியாவுக்கு எச்சரிக்கை.!

ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியது போல், இஸ்ரேலை ஹமாஸ் கைப்பற்ற நினைப்பதை போல், இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் அழிக்க முயற்சித்து வருகின்றனர்.

Gurpatwant Pannu Warning To India:
Gurpatwant Pannu Warning To India (Photo Credit: Twitter)

அக்டோபர் 11, டொராண்டோ (Social Viral): இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளை பதறவைக்கும் வகையில் இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. வரலாற்றில் அழிக்கப்பட்ட பாலஸ்தீனிய நாடு வேண்டும் என்ற நோக்கில் ஆயுதமேந்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு போர்முனை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரேல் அரசு, பின் சுதாரித்து பதில் தாக்குதலை கையில் எடுத்தது. ஹமாஸ் ஏவுகணைகள் நடுவானில் அழிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் குண்டுகள் பாலஸ்தீனியத்தில் உள்ள காசா நகரை ஒட்டுமொத்தமாக அழித்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய பகுதியில் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். Hamas Killed Children: வீடுவீடாக தலை துண்டிக்கப்பட்ட சடலங்கள் - ஹமாஸ் பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தில் 40 குழந்தைகள் கொடூர கொலை.! 

கண்ணில் படும் மக்களை ஈவு-இரக்கமின்றி கொன்று குவிப்பது, பெண்கள்-சிறுவர்கள் பாரபட்சமின்றி தலையை வெட்டி கொலை செய்து கடவுளின் பெயரை கூறி கொக்கரிப்பது எனது கொடூர செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு நடத்திய தாக்குதலை போல, இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை வைத்து தாக்குதல் நடத்துவோம். இந்தியா காலிஸ்தான் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். பஞ்சாப் மாநிலத்திற்கு தனிநாடு அந்தஸ்து வழங்க வேண்டும் என காலிஸ்தானிய பயங்கரவாதி குர்பத்வான்ட் பண்ணு (Gurpatwant Pannu) வீடியோ வெளியிட்டு இருக்கிறான்.

இந்தியாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பண்ணு, திருட்டுத்தனமாக கனடாவுக்கு சென்று, இன்று அந்நாட்டு குடிகளில் ஒருவனாக மாறி பின் இந்தியாவுக்கு எதிராக கோஷமிடுகிறான். இந்த செயல்களை ஏற்கனவே இந்தியா கனடா அரசை சுட்டிக்காண்பித்து எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Oct 11, 2023 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).