Anbil Mahesh: பெற்றோர்களே இதை செய்யாதீங்க - அமைச்சர் அன்பில் மகேஷ்.!
சிபிஎஸ்இ பள்ளிகளில் நோ ஆள் பாஸ் கையெழுத்து கேட்கப்பட்டால் கையெழுத்திட வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.
மே 02, திருச்சி (Trichy News Tamil): மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில், சிபிஎஸ்இ பாட வழித்திட்ட பள்ளிகளில், இனி 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அவர்கள் தோல்வி அடைந்தவர்களாக கருதப்படுவார்கள். மேற்படி வகுப்பு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசயத்துக்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். Tiruppur News: மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்.. ஆசையாக அழைத்துச்சென்று பயங்கரம்.. திருப்பூரில் கொடூரம்.!
அமைச்சர் திட்டவட்டம்:
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டள்ளது கண்டிக்கத்தக்கது. 8 வயது, 10 வயது சிறார்களிடம் சென்று நீர் தேர்வில் தோல்வியடைந்துவிட்டாய். அடுத்து ஒரு ஆண்டு கூடுதலாக அதே ஆண்டில் படிக்க வேண்டும் என்று கூறினால் அவரின் மனநிலை எப்படி இருக்கும்? சிபிஎஸ்இ பள்ளியில் கட்டணம் கட்டி உன்னை படிக்க வைக்கிறேன் என்று கூறினால், அந்த சிறுவனுக்கு புரியுமா? பெற்றோர்கள் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். மாணவர்களின் நலனுக்கு பெற்றோர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் ஆள் பாஸ் ரத்து விவகாரத்தில் கையெழுத்து கேட்டால் கையெழுத்திட கூடாது" என பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு:
வீடியோ நன்றி: புதிய தலைமுறை
(The above story first appeared on LatestLY on May 02, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

