Tenkasi News: ஒன்றா, இரண்டா.. கடையநல்லூரில் நள்ளிரவில் சுற்றுப்போடும் தெருநாய்கள்.. பகீர் வீடியோ வைரல்..!
ஒரு தெருவில் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் நள்ளிரவில் ஒரே இடத்தில் முகாமிட்டு அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் (Kadayanallur Dogs Viral Video) இந்த சம்பவம் நடைபெற்றது. நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16, கடையநல்லூர் (Tenkasi News Today): தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில், கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே தெருநாய்கள் மக்களை துரத்தித்துரத்தி கடித்த நிலையில், 2 வாரத்தில் மட்டும் 30 பேர் வரை பாதிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 13 பேரை தெருநாய்கள் ஒரேநாளில் கடித்தது. Rain School Holiday: தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கொட்டித்தீர்த்த கனமழையால் அறிவிப்பு.!
நாய்களை அகற்ற கோரிக்கை:
இந்நிலையில், கடையநல்லூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவு நேரத்தில் தெரு நாய்கள் கூட்டமாக நிற்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. சுமார் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றாக இருந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மருத்துவ அவசரத்துக்காக வெளியே செல்வோர் இவ்வாறான நிலைமையை எப்படி எதிர்கொள்வது எனவும் கேள்வி எழுந்துள்ளது.
கடையநல்லூரில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாக புகார்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் உள்ள ஒரு தெருவில் இருக்கும் நாயிகள். கடந்த 10 நாள்களில் பல பேரை கொடூரமாக தாக்குதல்கள் நடந்துள்ளது. @CMOTamilnadu @Udhaystalin @TRBRajaa @Anbil_Mahesh பள்ளி குழந்தைகள், உயிரை குறிவைக்கும் தெருநாய் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? Pls save us 🙏🏾🙏🏾 https://t.co/L1cMZpL0in pic.twitter.com/qgNX19YJ1U
— Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 (@thil_sek) October 15, 2025
(The above story first appeared on LatestLY on Oct 16, 2025 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

