ஜூன் 19, தான்பாத் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பத் மாவட்டம், லோஹர்பரவா, ஜிடி சாலை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு லாரி - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வந்த லாரியும், முன்னோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 நண்பர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல நொறுங்கியதால், உடல் பாகங்கள் நசுங்கி உயிர்பலி ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னரே லாரி எதிர்திசையில் பயணித்ததால் விபத்து நடந்து நால்வர் பலியான சோகம் உறுதியானது. லாரி மற்றும் அதன் ஓட்டுனரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)