Bus Accident: 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!

மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bus Accident In Maharashtra (Photo Credit: @vani_mehrotra X)

செப்டம்பர் 23, அமராவதி (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், அமராவதி (Amravati) அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேருடன் சென்ற பேருந்து, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து (Private Bus Accident) விபத்துக்குள்ளானது. வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  Dead Man Becomes Alive: இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!

பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement