Boy Killed In Bus Collision: பேருந்து மோதி சிறுவன் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!
தெலுங்கானாவில் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 24, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், போரபண்டா (Borabanda) காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சிவசரண் (வயது 11) பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த பள்ளி பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில், சிறுவன் சாலையில் விழுந்து பேருந்து (School Bus) சக்கரங்களுக்கு அடியில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (செப்டம்பர் 23) மாலை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sexual Assault Case: 2 சிறுமிகளை சீரழித்த இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)