நவம்பர் 20, லஹிஸாரை (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள லஹிஸரை மாவட்டம், பஞ்சாபி முஹல்லா, கபையா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், இன்று சஹத் காட் பகுதியில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். அச்சமயம் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியசூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அங்குள்ள பெகுசராய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாட்னா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த லஹிஸரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் குமார், நேரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது. AAP Party Gayatri Bishnoi Complaint: ஏசி கோச்சில் மகளிரணி தலைவி முன்பு சரக்கடித்து ரகளை செய்த இளைஞர்கள்: போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பேரதிர்ச்சி.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)