Fire on Temple: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; ஆராதனையில் ஏற்பட்ட தீ விபத்தால், 13 பேர் படுகாயம்.!
தெய்வங்களுக்கு ஆராதனை காண்பித்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால் 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
மார்ச் 25, உஜ்ஜைன் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் மஹாகல் கோவில் உள்ளது. வடமாநிலங்களில் தற்போது ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதால், கோவில்களில் மக்கள் வெள்ளம் திரண்டு இருக்கிறது. அந்த வகையில், மஹாகல் கோவிலிலும், கர்பக்ரிஹா என்ற நிகழ்வில் தெய்வங்களுக்கு ஆராதனை காண்பிக்கப்பட்டது. அச்சமயம் எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோவில் குருக்கள் மற்றும் பக்தர்கள் என 13 பேர் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். Holi Festival 2024: அன்பு, சகோதரத்துவத்தை வர்ணங்களால் வலுப்படுத்தும் ஹோலி பண்டிகை; வரலாறு, சிறப்புக்கள் என்ன?.. விபரம் இதோ.!
#WATCH | Ujjain, Madhya Pradesh | 13 people injured in a fire that broke out in the 'garbhagriha' of Mahakal Temple during bhasma aarti today. Holi celebrations were underway here when the incident occurred. The injured have been admitted to District Hospital.
(Earlier visuals… pic.twitter.com/cIUSlRirwo
— ANI (@ANI) March 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2024 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

