பிப்ரவரி 16, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெக்டில் மாவட்டம், தரூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷித் (வயது 9). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கிய சிறுவனை குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆனால், சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதனைக்கேட்டு துடித்துப்போன குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. Husband Suicide: கணவனின் பேச்சை கேட்காமல் ரீல்ஸ் மோகத்தில் மனைவி; மரத்தில் தூக்கிட்டு உயிரைமாய்த்த சோகம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)