Viral Video: தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து பலி.. அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி உள்ளே..!
உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 19, பாக்பத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் (Baghpat) சப்ரௌலி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியரை இரவில் ஒரு நாகப்பாம்பு கடித்துள்ளது. மனோஜ் என்ற வாலிபர் ஹோட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இரவில் ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்தார். வைரலான சிசிடிவி வீடியோவில் பாம்பு, அவரை 2 முறை கடித்திருப்பது (Snake Bite) தெளிவாகத் தெரிகிறது. கடித்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் பீதியுடன் எழுந்தார். பின்னர், ஹோட்டல் உரிமையாளர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், கொண்டு செல்ல தாமதமானதால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி.. சோக சம்பவம்..!
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)