மே 17, விஜயவாடா (Andhra Pradesh): விஜயவாடா பகுதி அய்யப்பநகரில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சாய் என்ற ஆறு வயது சிறுவன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளான். இதனால் சிறுவனின் இதயம் நின்றுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற டாக்டர் ரவளி, மயங்கி கிடந்த சிறுவனுக்கு சிபிஆர் செய்தார். சில நிமிடங்கள் சிபிஆர் செய்த பிறகு சிறுவன் சுயநினைவு அடைந்தான். தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் டாக்டரின் பெரும் உதவிக்கும் அவரது பெரிய மனதுக்கும் நன்றி தெரிவித்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Diesel Parotta: எண்ணெய்யா.. இப்போ டீசல் போட்டு சமைப்பது தான் ட்ரெண்ட்.. வைரலாகும் டீசல் பரோட்டா.. கடை உரிமையாளர் சொல்வதென்ன?

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)