செப்டம்பர் 23, பீகார் (Bihar News): பீகாரிலுள்ள நாளந்தாவில் உள்ள சதர் ஷெரீப் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட இறந்தவர் திடீரென எழுந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. அந்த நபர் ஜெரோயின் கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ் குமார். இவர் குளியலறையை சுத்தம் செய்யச் சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் அசைவே இல்லாமல் ஆகியுள்ளது. அவர் மாரடைப்பில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு அவர் எழுந்து நின்றுள்ளார். இச்சம்பவத்தால் மருத்துவமனை முழுதும் பரபரப்பு நிலவியது. Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; வீடெல்லாம் புழுக்கள் மொய்க்க துர்நாற்றம்.. பதறவைக்கும் சோகம்.!
இறந்தபின் மீண்டும் உயிருடன் வந்த அதிசய நபர்:
बिहार : डॉक्टरों ने शख्स को पहले मृत घोषित किया, बाद में शख़्स उठकर खड़ा हुआ ,घटना बिहार शरीफ सदर अस्पताल की है
शख़्स बाथरूम में गिर गया था, जिसके बाद डॉक्टर ने उसे मृत घोषित किया, आधे घंटे बाद शख़्स खुद खड़ा हो गया#Bihar #Hospital pic.twitter.com/qwJ9Bu7sZa
— News Jungal Media Pvt. Ltd. (@newsjungal) September 23, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)