ஜூன் 6, ராஜஸ்தான் (Rajasthan News): சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வகையில் இளைஞர் இஸ்மாயில் சௌத்ரி ரீல் செய்துள்ளார். அந்த வீடியோவில், இரு மஹிந்திரா கார் வாகனங்களின் மேற்கூரை மீது நின்றப்படி அவர் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் சுரங்க பாதைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 17ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆராய்ந்த காவல்துறையினர், வீடியோவில் தெரியும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து உரிமையாளர்களை கண்டறிந்து, இஸ்மாயில் சௌத்ரியை கைது செய்துள்ளனர். Japan To Launch Dating App: ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்.. டேட்டிங் ஆப் மூலம் அதிகரிக்க புதிய முயற்சி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)