Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் ஜோடி..!

புனேவிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தில் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ரீல் செய்துள்ள வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் ஜோடி..!
Insta Reel (Photo Credit: @punekarnews X)

ஜூன் 20, புனே (Maharashtra News): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம். பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள். சிலரோ லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் ஜம்புல்வாடி சுவாமிநாராயண் மந்திர் அருகே கைவிடப்பட்ட கட்டிடத்தில் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ரீல் செய்துள்ள வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Kia EV9: கியாவின் புதிய எலெக்ட்ரிக் கார்.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 20, 2024 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).