ஏப்ரல் 08, தென்காசி (Tenkasi): 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் (Lok Sabha election) ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் (Sankarankoil Taluk Office) இன்று காலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2வது நாளாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரடி மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். Manager Spots RCB Fan on TV: "மாட்டுனீய டா.. பம்பரக்கட்ட மண்டையா.." எனப் பிடித்த மேனேஜர்.. சிக்கினாண்டா சிவனாண்டி.. வைரலாகும் வீடியோ..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)