TN Weather Update: குமரி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Rains (Photo Credit: @akarthikcs X)

ஜூலை 22, சென்னை (Chennai News): தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் மண்டல ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை, காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய தாலுகாக்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கிறார். குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; மாமியார் வீட்டில் வரதட்சணை கொடுமையால் மணமான 2 ஆண்டுகளில் சோகம்.!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement