TN Weather Update: காலை 10 மணிவரையில் 3 மாவட்டங்களில் இடியுடன் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain (Photo Credit: @thatsTamil X)

ஆகஸ்ட் 07, சென்னை (Chennai News): சென்னை மண்டலா வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட தனது நாளைய வானிலை (Tomorrow's Weather) செய்திக்குறிப்பில், "தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. TN Weather Update: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement